மதுரை – அக் -21,2023
newz – webteam
தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவாக அறிவுறுத்தலின்படி 2023-ம் ஆண்டு சாவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி கடந்த 17.10.2023-ம் தேதி மதுரை மாநகர ஆயதப்படை அருள்மிகு தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் காவல்துறை சார்பாக சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைப்பு என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை போட்டியும் காவலர் பொதுமக்கள் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஓவிய போட்டியும் ஏ-ம் வகுப்பு முதல் 12-4ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவயர்களுக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர்களை நடுவர்களாக கொண்டு நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் மதுரை மாவட்டத்தின் 32 பள்ளிகளிலிருந்து 128 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவ னியர்களுக்கும். நடுவர்களுக்கும் மதுரைமாநகர காவல் ஆணையர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் பின்னர்
இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார், மேலும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு, தலைமையிடம் மற்றும் போக்குவரத்து ஆகியோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் கூடுதல் காவலர் துணை ஆணையர், திட்டம், காவல் உதவி ஆணையர்கள் நகர் மற்றும் தல்லாகுளம் போக்குவரத்து, மதுரை மாநகர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திலகர் தி்டல், மத்தியம் மற்றும் திட்டப்பிரிவு ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
0 Comments