சென்னை – அக் -07,2023
newz – webteam
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 21.11.21-ம் தேதி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூமிநாதன் என்பவர் நவல்பட்டு காவல் சரகத்தில் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வாகன சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 03 நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் ஆடுகளை திருடிச் சென்றவர்களை பின்னால் தொடர்ந்து சென்று கீரனூர் காவல் சரகம், பள்ளத்துப்பட்டி அருகே மூவரையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது மூன்று நபர்களில் ஒருவரான மணிகண்டன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இது சம்மந்தமாக கீரனூர் காவல் நிலைய குற்ற எண்- 405/2021 u/s 302, 324, 224, 114,34,201 IPC-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடிக்கப்பட்டு குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த 29.09.2023-ம் தேதி புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளி-1 மணிகண்டன் என்பவரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, 302, 34 IPC-ன் படி ஆயுள் தண்டனை மற்றும் 10,000/- அபராதமும், மேற்படி அபராதத்தை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் மெய்காவல் தண்டனையும், 427 IPC-ன் படி இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் 5000/-ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மூன்று மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும், 201 IPC-ன் படி 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மேலும் 10,000/-ரூபாய் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் மெய்க்காவல் தண்டனை விதிக்கபட்டது. மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட 1.கீரனூர் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர், தற்போது பொருளாதார குற்ற பிரிவு, விழுப்புரம் மாவட்டம். 2. வட்ட காவல் ஆய்வாளர் கீரனூர் காவல் நிலையம், தற்போது உதவிஆணையர், திருப்பூர் மாநகர காவல் கட்டுபாட்டு அறை, 3. உதவி ஆய்வாளர், கீரனூர் காவல் நிலையம், தற்போது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, பொள்ளாச்சி, 4. தலைமை காவலர், கீரனூர் காவல் நிலையம், தற்போது கனேஷ் நகர் காவல் நிலையம், 5. முதல்நிலை காவலர், கீரனூர் காவல் நிலையம், தற்போது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, திருச்சி மாவட்டம், 6. முதல்நிலை காவலர், கீரனூர் காவல் நிலையம், ஆகியோர்களை காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையகம் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
0 Comments