ஆவடி – ஜன -13,2025
Newz -webteam
ஆவடி காவல் ஆணையரகம்
ஆவடி காவல் ஆணையரக சமத்துவ பொங்கல் விழா
இன்று ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினர்களுக்கான சமத்துவ பொங்கல் அவர்களது விழாவானது தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப.தலைமையில் மற்றும் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப., முன்னிலையில், திருமுல்லைவாயில் S.M நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் சிறப்பு ஏற்பாடுகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
இவ்விழாவில் காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களும் குடும்பத்துடன் காவலர்களுடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும் பாரம்பரிய கலாச்சார போட்டிகளும்,குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், சிறப்பு ஏற்பாடாக விஜய் டிவி புகழ் மௌனராகம் முரளியின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது காவல்துறை தலைமை இயக்குனர் காவல்துறையினரின். நலன் கருதி தற்பொழுது வழங்கப்பட்டு வரும் சேமநல நிதியானது 8 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு கூடுதலாக தெரிவித்தார்
.காவலர்களை நியமிக்க உள்ளதாகவும்
இதனை அடுத்து ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட 10 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசுகளை ரொக்க பரிசுகளை வழங்கி. சிறப்பித்தார். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு பொருட்களை வழங்கினார்
இவ்விழாவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், மற்ற காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments