சென்னை -ஜீலை -06,2024
Newz -webteam
களவு மற்றும் கொள்ளை வழக்குகளில் புலனாய்வு செய்து சிறப்பாக பணியாற்றிய விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு…
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் கடந்த 24.02.2024ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் முன்கதவை உடைத்து உள்ளே சென்று தூங்கிக்கொண்டிருந்த முருகானந்தம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 56 சவரன் தங்க நகைகள், 4 செல்போன் மற்றும் பணம் ரூ. 55000/- ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியோடியுள்ளனர். இது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 15.06.2024ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் தனது தோள்பட்டையில் அணிந்த பையுடன் இராஜபாளையம் புதிய பேருந்துநிலையத்திற்குள் வந்த போது இராஜபாளையம் உட்கோட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த தலைமை காவலர் காளிதாஸ் என்பவர் அவரை பிடித்து விசாரித்து அவரது தோள்பட்டை பையை சோதனை செய்தபோது அதில் பழைய துணிகளும் குரங்கு குல்லாவும் மற்றும் கையுறையும் இருந்துள்ளது.
அந்த சந்தேக நபரை முழுவதுமாக விசாரித்தபோது அவர் பெரியகுளத்தைச் சேர்ந்த இராஜா என்பவரின் மகன் சுரேஷ்குமார் என்றும் தற்போது மதுரையில் குடியிருந்து வருவதாகவும், தான் பெரியகுளம் முருகன் மகன் மூர்த்தியின் கூட்டாளி என்றும். மூர்த்தி தற்போது மதுரையில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், மூர்த்தியின் தலைமையில் மற்ற எதிரிகளும் சேர்ந்துமாநிலம் முழுவதும் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
அவரது வாக்குமூலத்தின்படி தனிப்படையினர் மூர்த்தியின் கூட்டாளியான அருண்குமார். த/பெ.அழகர்சாமி, தென்கரை பெரியகுளம் என்பவரை கைது செய்து விசாரணை செய்த போது மூர்த்தியின் உறவினர்களான 1) லட்சுமி, 2) மோகன், 3) அனிதாபிரியா, 4) நாகஜோதி, 5) சீனிதாய், மற்றும் 6) மகாலட்சுமி ஆகியோர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை விற்பதற்கும் அதை வைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவதற்கும் எதிரிகளுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் மேற்கண்ட நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட எதிரிகள் 45 வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள 150 பவுன் தங்க நகைகள், லேப்டாப் – 3, Tablet-3, கைபேசி – 3 மற்றும் பணம் ரூ.2,50,000/- (மொத்த மதிப்பு 84 லட்சம்) ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கொள்ளையடித்த நகைகளை விற்று இராஜபாளையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள காட்டன் மில் ஒன்றினை மூர்த்தி வாங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதன் ஆவணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
எதிரி மூர்த்தி மற்றும் சில கூட்டாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
மேற்படி வழக்குகளில் திறமையாக செயல்பட்டு துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்த சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படையிரை காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர். சென்னை , நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
0 Comments