தென்காசி – ஜீன் -23,2024
Newz -webteam
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி
நேற்று ஒரே நாளில் மது, கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 84 நபர்கள் கைது
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் B.E., M.B.A., உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 63 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 496 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
.அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 10 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 18,940 மதிப்பிலான 468 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை விற்பனை செய்த 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3570 மதிப்பிலான சுமார் 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
செய்யப்பட்டது. சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 18 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..
0 Comments