தாம்பரம் -ஜீன் -24,2024
Newz -webteam
தாம்பரம் மாநகர காவல், கூடுவாஞ்சேரி சரகம். பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் CSI சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த விக்கி @ விக்னேஸ் என்பவர் வெட்டுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பீர்க்கங்கரணை காவல்துறையினர் சம்பவ இடம் சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்ததில்
மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் அமர்ந்திருந்த சந்தோஸ் என்பவரை 23.06.2024 ம் தேதி மாலை 6.மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி என்பவர் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் என கேட்டு செல்போனை பறித்து சென்றுள்ளார்.
பின்னர் சந்தோஸின் அம்மா சூரியகாந்தியிடம் பேசி செல்போனை வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களிடம் சூரியகாந்தி தன்னிடம் இருந்து செல்போனை பறித்து சென்று விட்டதாக கூறியதின் பேரில் இறந்து போன விக்கி மற்றும் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து இரவு 10.30 மணிக்கு சூரியகாந்தி வீட்டிற்கு கத்தியுடன் சென்று, சூரியகாந்தியை வெட்டியதால், சூரியகாந்தியின் அண்ணன் ராஜீவ் காந்தி, மற்றும் அவரது உறவினர்கள் சூரியகாந்தியை வெட்டிய நபர்களிடம் இருந்து 2 கத்திகளை பிடுங்கி, தன் சகோதரரை வெட்டிய நபர்களை விரட்டியதில் சந்தோஸின் நண்பர்கள் சிதறி ஓடி விட்டனர்.
விக்கி (எ) விக்னேஷ் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டதால், அவரை விரட்டி சென்று பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியால் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் வெட்டியதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
பீர்க்கன்காரணை காவல் துறையினர் சம்பவ இடம் சென்று, உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக, கொலை வழக்கு பதிவு செய்து சூரியா (எ) சூரியகாந்தி, அமோஸ் மற்றும் குமார் ஆகிய நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, தலைமறைவான குற்றவாளிகளைதேடிவருகின்றனர்.
0 Comments