தென்காசி – ஜீன் – 27,2024
Newz – webteam
தென்காசி மாவட்டத்தில் மூன்றுநாட்களில் 16,பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது தென்காசி எஸ்பி அதிரடி நடவடிக்கை
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான மாறாந்தை வடக்கு தெருவை சேர்ந்த பிச்சையா என்பவரின் மகனான ஜெயராமன்(27) மற்றும் முத்தையா என்பவரின் மகனான ஆறுமுகம் (47) மற்றும் ஊத்துமலை காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான
மலையாங்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் வெங்கடேஷ்(22), வீரவநல்லூர் நைனார் காலனி சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் வேனு(21), வெள்ள பாண்டி என்பவரின் மகன் நகுல்(21) மற்றும் கன்னியாகுமரி மாங்காட்டுவிளை செல்வராஜ் என்பவரின் மகன் அனீஸ் ராஜ்(30) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபட்டநிலையில் அடுத்த இரண்டு நாட்களில் 10 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய கொலை வழக்கின் இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஊத்துமலை காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர் உட்பட ஆறு நபர்கள் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது
இந்நிலையில், இன்று தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்துக்கல் வலசையில் கடந்த 06.06.24 அன்று நடைபெற்ற கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகளான குத்துக்கல்வலசை பெருமாள் சாமி என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (27), வேதம் புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த லியாக்கத் அலி என்பவரின் மகன் அஜ்மல் அலி (24),
குத்துக்கல்வலசை அழகு முத்து நகர் 1வது தெருவை சேர்ந்த பால்சாமி என்பவரின் மகன் குமார் (28) மற்றும் நேருஜி தெருவை சேர்ந்த ராமசுப்பையா என்பவரின் மகன் ரமேஷ் குமார் (23) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் B.E., M.B.A., பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்..
0 Comments