சென்னை – அக் -12,2023
newz – webteam
கடலோரப் பாதுகாப்பு குழுமம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவுப்பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக ‘SAGAR KAVACH (AP,TN&PCY) 02/2023’ என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது 10.10.2023 காலை 08.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பயிற்சியில் இந்திய கடலோரப் பாதுகாப்பு படை, இந்திய கப்பற்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, நுண்ணறிவுப்பிரிவினர், சுங்கத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, குடியுரிமை துறை, இந்திய எண்ணை மற்றும் எரிவாயு ஆணையம், துறைமுகங்கள், உள்ளிட்ட மத்திய, மாநில அரசுசார் நிறுவனங்களோடு தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமம் மற்றும் மாநில காவல் துறையினர்என சுமார் 8542-த்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த பாதுகாவலர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதில் ஒரு பிரிவினர் முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் கப்பல்களைக் கடத்துதல், கடத்தி பிணைய கைதிகளைப் பிடித்துவைத்தல் போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல திட்டமிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். பாதுகாப்பு படைகளை சேர்ந்த மற்றொருபிரிவினர் அவர்களை ஊடுருவாமல் தடுக்கும் பணியில் தேவையான கப்பல்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள், இடைமறிக்கும் படகுகள், கரையோரம் ஓடும் வாகனங்கள் என 1000த்திற்கும் அதிகமான ஊர்திகளோடு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் 8 அதிவிரைவு படகுகள், 13 இயந்திர படகுகள் மற்றும் 05 சிறப்பு ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போல தமிழக கடலோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட காவலர்கள் 20 இடங்களில் இடைமறிக்கப்பட்டு 68 நபர்கள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டனர். பயிற்சியின் ஒரு பகுதியாக தீவிரவாத ஒத்திகை பயிற்சி தூத்துக்குடி வ.உ சிதம்பரனார்
துறைமுகத்தில் காலை 10.00 முதல் 2.00 மணி வரை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் Vessel Traffic System (VTS) சிக்னல் டவரை கைப்பற்றி அதில் உள்ள 4 ஊழியர்களை பிணைய கைதிகளாக பிடித்துவைத்து அவர்களை விடுவிக்க ரூபாய் 4 கோடி பணம் கேட்டு நிபந்தனை வைப்பது போலவும். இதை மறுத்து தமிழ் நாடு அரசு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டு அதன் பேரில் K.அதிவீரபாண்டியன், காவல் கண்காணிப்பாளர் கடலோர பாதுகாப்பு குழுமம், நாகபட்டினம் அவர்களின் தலைமையில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், மெரைன் கமண்டோ, இந்திய கடற்படை, இந்திய கடலோர பாதுகாப்பு படை, தமிழ்நாடு காவலர்கள் மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பிணைய கைதிகளை மீட்பது போலவும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சி சங்கர் ஜிவால், இ.கா.ப, காவல்துறை தலைமை இயக்குனர் வழிகாட்டுதலின் படி முனைவர் சந்தீப் மித்தல்,இ.கா.ப., கூடுதல் காவல் துறை இயக்குனர், கடலோர பாதுகாப்பு குழுமம் ஆலோசனைப்படி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
0 Comments