ஆவடி – அக் -13,2023
newz – ajay meeran

வாகன தணிக்கையில் 571 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆவடி காவல் ஆணையரகம், T15 SRMC காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை கூல்லிப் மற்றும் பான்மசாலா விற்பனையை தடை செய்வது தொடர்பாக ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் T,15 SRMC காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 07.00 மணிக்கு காவல் ஆய்வாளர்,த.விஜயகுமார், உதவி ஆய்வாளர்கள் .சுரேஷ், விக்னேஷ், .த.கா. 12445 முத்துகிருஷ்ணன், த.கா. 12365 சுதாகர், காவலர் 37190 யேசுரன், காவலர் 15939 ஜெஸ்டின் பிரபாகரன், காவலர் 15547 ஜெயசீலன், காவலர் 15256 மற்றும் செல்வராஜ் ஆகியோர் போரூர், குன்றத்தூர் ரோடு KVB வங்கி அருகில் வாகன தணிக்கை செய்த போது சந்தேகபடும் படியாக வந்த TN12 AX4187 என்ற Jupiter இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் சுமார் 18 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான கூல்லிப் மற்றும் பான் மசாலா பொருட்கள் இரண்டு மூட்டைகள் இருந்தது.
மேற்படி இருசக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் என்பவரை விசாரணை செய்த போது ராஜு கூல்பார், மாங்காடு ரோடு. குமனச்சாவடி என்ற கடையின் உரிமையாளர் ஏழுமலை. மற்றும் மாரியப்பன் ஆகியோரிடமிருந்து வாங்கி வருவதாக தெரிவித்தின் பேரில் மேற்படி கடையை சோதனை செய்த போது சுமார் 26 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான கூல்லிப் மற்றும் பான்மசாலா பொருட்கள் மூன்று முட்டைகள் இருந்தது.
மேற்படி எதிரிகளை விசாரணை செய்த போது தினமும் போருர் சந்திப்பு வழியாக வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் TN09 CJ0973 Honda xcent என்ற காரில் வருவதாக தெரிவித்ததின் பேரில் இன்று போரூர் சந்திப்பில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது மேற்படி காரை நிறுத்தி சோதனை செய்ய அதில்
சுமார் 15 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான கூல்லிப் மற்றும் பான் மசாலா பொருட்கள் மூன்று முட்டைகள் இருந்தது.
மேற்படி காரில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த நபர்களை விசாரணை செய்ததில் காஞ்சிபுரம் மாவட்டம் மணியமங்கலத்தில் வசிக்கும் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தகர சீட்டால் மூடப்பட்ட சிறிய குடோனிலிருந்து மேற்படி குட்கா புகையிலை பொருட்களை கொண்டு வந்தாக கூறியதின் பேரில் அந்த இடத்கிற்கு மேற்படி போலீசார் பார்டி சகிதம் சென்று சோதனை செய்த போது அந்த இடத்தில் சுமார் 530 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான கூல்லிப் MDM, HANS, SWAGATH மற்றும் பான்மசால ஆகியவை போலீசார் அங்கிருந்து பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
0 Comments