சென்னை -ஜீன் -20,2024
Newz -webteam
அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கிச் சுடுதல் போட்டி (பெண்கள்) 2024 ன் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, இ.ஆ.ப,, பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதன்மை செயலர் சிவதாஸ் மீனா, இ.ஆ.ப, இன்று சென்னை இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கிச் சுடுதல் போட்டி (பெண்கள்) 2024ன் நிறைவு விழாவில் தலைமையேற்று வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்
.இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை பெண்கள் அணியினர் ஒட்டு மொத்த போட்டிகளில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் பங்கு என்பது 50 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்தததையடுத்து, தமிழ்நாடு அரசு 2023 ம் ஆண்டை பொன்விழாவாக கொண்டாடியது.காவல் துறையில் பெண் காவலர்கள் முக்கியப் பங்காற்றி வருவதுடன், மாநில தேசிய சர்வதேச அளவில் நடத்தப்படும்
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருவதை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவல்துறையில் பெண்களுக்காக பணி மற்றும் வாழ்க்கை சமநிலை குறித்த ஆனந்தம் பயிற்சித் திட்டம், மேலும் பெண் காவலர்களுக்கான ஆண்டு தோறும் மாநில அளவிளானதுப்பாக்கிச் சுடுதல் போட்டி நடத்துவது உள்ளிட்ட நவரத்தின திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான அகில இந்திய காவல் துப்பாக்கிச்
சுடுதல் போட்டி ஆண்டு தோறும் அகில இந்திய காவல்துறை
விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் படி
மாநில காவல்துறை அமைப்புகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினருக்கு
இடையே ஆயுதங்கள் குறித்த மதிப்பீடுகள் மற்றும் தொழில் முறை திறன்களை
மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் அகில இந்திய காவல்துறை திறனாய்வுப்
போட்டிகளின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
இந்தியாவிலேயேமுதல்முறையாக பெண்காவலர்களுக்காக
பிரத்தியேகமாக அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியை
தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, காவல்துறை தலைமை இயக்குநர்
தமிழ்நாடு அரசின் மூலம் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டு, 2024 ஜூன் 15 முதல் ஜூன் 20 வரை போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டது.
இதன்படி, தமிழ்நாடு காவல்துறையினரால் அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கிச் சுடுதல் (AIPDM) போட்டி (பெண்கள்)-2024, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்திலுள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளியின் துப்பாக்கிச் சுடுதளத்தில் 2024 ஜூன் 15 முதல் ஜூன் 20 வரை நடத்தப்பட்டது.
இதில், ரைபிள் (5 போட்டிகள்), பிஸ்டல்/ரிவால்வர் (4 போட்டிகள்) மற்றும் கார்பைன் / ஸ்டென் கன் (4 போட்டிகள்) பிரிவுகளில் 13 விதமான போட்டிகள் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய விதிமுறைகளின்படி நடத்தப்பட்டது. இதில் மாநில காவல் துறை அமைப்புகள் / மத்திய ஆயுதப்படை பிரிவுகளின் 30 அணிகளைச் சேர்ந்த 7 உயரதிகாரிகள் உள்ளிட்ட 453 பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கிச் சுடுதல் (AIPDM) போட்டி (பெண்கள்)-2024 ல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் காவலர்கள் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உள்ளிட்ட 11 தனிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மேலும் கீதா என்ற தமிழ்நாடு காவல்துறை பெண் காவலர் கார்பைன்/ஸ்டென் கன் போட்டியின் எல்லா நிலைகளிலும் சிறந்த வீராங்கனை என்ற பட்டத்துக்கான பதக்கத்தை வென்றார். இதைப் போல ரிவால்வர் / பிஸ்டல் போட்டிகளின் எல்லா நிலைகளிலும் சிறந்த வீராங்கனை என்ற பட்டத்தைஎல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் பராமிளா வென்றார்.
மேலும் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில், சிறந்த அணியாக
தமிழ்நாடு 767 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், அஸ்ஸாம் ரைபிள்
அணி 716 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், இந்திய திபெத்திய
எல்லைக் காவல் படை அணி 715 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும்பெற்றுள்ளன.
பிஸ்டல் ரிவால்வர் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சிறந்த அணியாக
எல்லைப் பாதுகாப்பப் படை 476 மதிப்பெண்கள் பெற்று முதல் இடக்கையம்எல்லைப் பாதுகாப்புப் படை 476 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், தமிழ்நாடு 475 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், அஸ்ஸாம் ரைபிள்ஸ் 392 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
கார்பைன் /ஸ்டென் கன் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சிறந்த அணியாக தமிழ்நாடு 333 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், எல்லைப் பாதுகாப்புப் படை 290 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை 275 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கிச் சுடுதல் (AIPDM) போட்டி (பெண்கள்) 2024 ல் தமிழ்நாடு 1575 மதிப்பெண்கள் பெற்று ஒட்டுமொத்த முதன்மையிட கோப்பையையும், எல்லைப் பாதுகாப்புப் படை 1446 மதிப்பெண்கள் பெற்று ஒட்டுமொத்த இரண்டாமிட கோப்பையையும் வென்றன.
மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழ்நாடு 1575 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அஸ்ஸாம் மாநிலம் 1218 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலர் திரு. சிவதாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
இந்த விழாவில், காவல்துறை இயக்குநர் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 Comments