மதுரை – நவ -19,2024
Newz – Webteam
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி , மாநகர போக்குவரத்து காவல் சார்பாக “ஒரு நாள் ஒரு சாலை” என்கிற தலைப்பில் ஒவ்வொரு நாளும் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றை தேர்வு செய்து சீரான போக்குவரத்துக்கு வழி செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும், அந்த சாலைகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,வாகன நிறுத்தங்களை ஒழுங்குமுறை படுத்துதல், போக்குவரத்தை சீர் செய்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். அதன் படி இன்று சிம்மக்கல், வக்கீல் புதுத்தெரு பகுதியில் உள்ள சாலைகளில் நடைபெற்றது. இப்பணிகளை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா மேற்பார்வையிட்டார். உடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, கார்த்திக் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் உடன் இருந்தனர்.
0 Comments