திண்டுக்கல் – ஜன -10,2024
Newz – webteam
திண்டுக்கல் மாவட்டத்தில் இருவேறு நபர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.22,660/- பணம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிலிப்ளஸ் சுதாகர் (வயது-58) என்பவர் தனியார் நிறுவன குழுவில் சேர்வதற்காக செலுத்திய ரூ.14,660/- பணத்தை மோசடி நபர்கள் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், மேலும் அதேபோல் குட்டத்துபட்டியைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது-25) என்பவரிடம் ஆன்லைனில் கோழி விற்பனை செய்வதாக ரூ.8,000/- பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து இழந்த மொத்தம் பணம் ரூ.22,660/-ஐ மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அதேபோல் ஆன்லைன் மூலம் மோசடியாக பணம் ரூ.1,40,000/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இந்த வழக்குடன் சேர்த்து 3,வழக்கு்களில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப.உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து இழந்த பணம் ரூ.1,40,000 ரூ 22660 ஆகிய தொகைகளை மீட்டு மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்
0 Comments