நாகப்பட்டினம் -ஜீலை -21,2024
Newz -webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ கா. ப உத்தரவின் பேரில் கணவனைப் இழந்து தனியாக வசித்து வந்த தாய் மற்றும் மகளை பாலியல் தாக்குதல் செய்த நபர் அதிரடி கைது, குற்றவாளி தப்பிக்க முயன்ற போது கீழே விழுந்து வலது காலில் எலும்பு முறிவு மற்றும் இடது கையில் பலத்த காயம்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தெற்குப்பொய்கை நல்லூரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், மற்றும் அவரது மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். கணவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் இரவு தாய் மாவு அரைக்க வெளியில்
சென்றுவிட்டார். கடந்த 19.07.2024 அன்று நள்ளிரவு சுமார் 01 மணியளவில் சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது யாரோ ஒரு மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் வருவதைக் கண்டு உடனே சத்தம்போட்டுள்ளார். உடனே அந்த மர்ம நபர் அவரை தள்ளிவிட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட அந்த சிறுமி கொள்ளைபுரம் வழியாக வெளியில் ஓடிச்சென்று தனது உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
சத்தம்கேட்டு வெளியில் வந்து பார்த்த உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றிகூறி தன் தாயை காணவில்லை என்றும் கூறியுள்ளார். உடனே உறவினர்கள் தேடி பார்த்தபோது வீட்டின் கொள்ளைபுரத்தில் உடம்பில் கண், காது மார்பு நெற்றி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் அந்த பெண் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் தாய் மற்றும் மகள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவகல்லூரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இது குறித்து நாகை மாவட்ட வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையாக கொண்டு வேளாங்கண்ணி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்,
தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் குற்றம் நடந்த சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணையில் இறங்கினார். பின்பு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து அந்த மர்மநபரை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு கருவேலங்கடை அருகே சுற்றித்திரிந்த காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த முத்துக்குமாரை
நாகை மாவட்ட காவல்துறையினர் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிய முத்துக்குமார் வழுக்கி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு, மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட காவல் துறையினர் ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதித்தினர்.மேலும் அவர் சிகிச்சைக்குப் பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.
0 Comments