தூத்துக்குடி – நவ -20,2024
Newz – Webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல்றை பேரிடர் மீட்புப் படையினர், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆய்வு.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை முன்னிட்டு ஆபத்துக் காலங்களில் அவசர உதவிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப மாவட்ட காவல்துறையில் 4 பேரிடர் மீட்பு படை குழுக்கள் உருவாக்கப்பட்டு மீட்பு உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று ஆயுதப்படை வளாகத்தில், மேற்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மேற்படி பேரிடர் மீட்பு படையினர் வெள்ள நேரங்களில் துரிதமாக செயல்பட்டு பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்தும், மீட்பு படையினர் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
0 Comments