தென்காசி – மே -18,2023
newz – webteam
மகளிர் குழு பணத்தை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர்
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் 19 பெண்கள் இணைந்து ஸ்டார் மகளிர் குழுவில் கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் 100, 200 ரூபாய் என்ற வீதம் சிறுக சிறுக சேமித்து வந்த நிலையில் அக்குழுவின் தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2018 முதல் சேமிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மேற்படி குழு தலைவி மீதமுள்ள பணத்தை தங்களுக்கு தராமல் மோசடி செய்ததாக பாதிக்கபட்ட பெண்கள் 01.04.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், IPS., அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சார்பு ஆய்வாளர் உமா மகேஸ்வரி அவர்கள் விசாரணை செய்து ஸ்டார் மகளிர் குழுவின் சேமிப்பு பணம் 2,56,000/- ரூபாய் மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பணத்தை மீட்டுக் கொடுத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பணத்தைப் பெற்ற பெண்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
0 Comments