திருநெல்வேலி – நவ -06,2023
newz – webteam
திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார். இ.கா.ப., மற்றும் நெல்லை காவல் துணை ஆணையாளர் .G.S.அனிதா (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கடந்த 26.08.2023 மற்றும் 27.08.2023 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த ஆயுதப்படை மைதானத்தில் இன்று 07.11.2023 நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற 45 பேரில் 38 நபர்களும் மற்றும் பொது ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற 257 பேரில் 207 நபர்களும் என மொத்தம் 302 பெண் விண்ணப்பதாரர்களில் 245 பெண் விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனரஂ
இந்நிகழ்வின்போது மேல் முறையீடு செய்யும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை சரிசெய்யும் பணியானது நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .C.மகேஸ்வரி இ.கா.ப தலைமையில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர், காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
0 Comments