ஆவடி – நவ-06,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் சென்னை அண்ணாமலை புரத்தை சார்ந்த ஜீவன்குமார் மகனான ஸ்ரீஹரி 46 என்பவர் கொடுத்த புகார் மனுவில் திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் கிராமத்தில் உள்ள 97 சென்ட் நிலத்தினை கடந்த 2006 ம் ஆண்டு
ஜெயராமன் என்பவரிடமிருந்து புகார்தாரரின் மனைவி மற்றும் அவரது
நண்பரிகளானபிரகாஷ், ஸ்ரீலதா மகாலட்சுமி, லதாபாலாஜி,
ரச்சமனதப்ரியா ஆகியோர் சேர்ந்து செங்குன்றம் சார்பதிவாளர்
அலுவலகத்தில் 2006 ம் ஆண்டு கிரையம் பெற்று மனுதாரரின்
அனுபவத்தில் இருந்துவந்தது. இந்நிலையில் மேற்படி இடத்தினை
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அஞ்சல் மாதாகோயில்
தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆள்மாறட்ட நபர்களை ஏற்பாடு
செய்து ராமநாதன். என்பவருக்கு செங்குன்றம் சார்பதிவாளர்
அலுவலகத்தில் போலியாக கிரையம் செய்து கொடுத்து பணம் பெற்று
முறையற்ற லாபம் அடைந்துள்ளார். இடத்தின் தற்போதைய மதிப்பு
சுமார் 10 கோடி ஆகும்.
இப்புகார் மனு தொடர்பாக ஆவடி காவல் ஆணையாளர் K.சங்கர் IPS. மற்றும் காவல் துணை ஆணையாளர் .P.பெருமாள் IPS., ஆகியோரின் உத்தரவின் பேரில் நில பிரச்சனை தீர்வு பிரிவு ஆய்வாளர் ஜெயசந்திரன் அவர்களால் வழக்கு பதிவு செய்து. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படையினர் தலைமறைவாக இருந்த முக்கிய எதிரியான திருவள்ளுர் மாவட்டம் சோழவரத்தை சார்ந்த மகாலிங்கம் மகனான கார்த்திக் 32 என்பவரை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு தலைமறைவு எதிரியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு நில பிரச்சனை தீர்வு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் அவர்களது குழுவினரை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்
0 Comments