திருநெல்வேலி மாநகரம் – பிப் -06,2024
Newz – webteam
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான 3359 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிக்கான உடற்தகுதி மற்றும் திறன் தேர்வு 06-02-2024 முதல் 10-02-2024 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாநகரம் பாளை தூய சவேரியர் கல்வியில் கல்லூரி மைதானத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., மற்றும் நெல்லை காவல் துணை ஆணையர் (மேற்கு) V.கீதா ஆகியோர் தலைமையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான பெண் விண்ணப்பதாரர்களின் மொத்தம் 668 பெண் விண்ணப்பதாரர்களில் இன்று 400 நபர்களுக்கு நடைபெற்ற சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் அடிப்படை உடற்தகுதி தேர்வில் 296 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். மீதமுள்ள 268 விண்ணப்பதாரர்களுக்கு வருகின்ற 09-02-2024ஆம் தேதி நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் அடுத்த நாட்களில் நடைபெறும் உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் காவல் துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள், காவல் ஆளினர்கள் அனைவரும் இந்த உடற்தகுதி தேர்வின் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை (07.02.2024) 268 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வு நிர்வாக காரணங்களால் 09.02.2024 அன்றைய தினமான வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாளை (07.02.2024) வரவேண்டிய 268 விண்ணப்பதாரர்களுக்கும் 09.02.2024 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறுநாளான 10.02.2024 சனிக்கிழமை உடல் திறனாய்வு தேர்வு நடைபெறும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
0 Comments