ஆவடி – செப் -24,2025
Newz – Webteam



சென்னை ஆவடி காவல் உட்கோட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக மூன்று காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எண்ணுார், மணலி, மணலி புதுநகர் மக்கள் 40 கி.மீ., துாரம் பயணித்து, நேரடி பேருந்து வசதி கூட இல்லாத ஆவடி போலீஸ் கமிஷனரகம் செல்ல வேண்டியுள்ளதால் மிகவும் திண்டாடுகின்றனர். அருகே உள்ள சென்னை போலீஸ் கமிஷனரகத்துடன் இணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். எண்ணுாரில் குற்றங்கள் அதிகரிப்பாலும், மக்கள் தொகை பெருகி வருவதாலும், காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, 25 காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு, 2022ம் ஆண்டில், ஆவடி தனி போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டது.
இதில், சென்னை மாநகராட்சிக்குள் இருக்கும் எண்ணுார், சாத்தாங்காடு, மணலி மற்றும் மணலிபுதுநகர் காவல் நிலையங்கள், ஆவடி கமிஷனரகத்தில் இணைக்கப்பட்டன. தற்போது இதன் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
அப்போதே, ‘எண்ணுாரில் இருந்து ஆவடி, 40 கி.மீ., துாரத்தில் உள்ளது. அங்கு செல்ல நேரடி பேருந்து, ரயில் உள்ளிட்ட வசதிகள் கிடையாது. மாறாக, தனி வாகனத்தில் செல்லவும் அதிக பொருட்செலவும் ஆகும்’ என, அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும், அதை கருத்தில் கொள்ளாமல், நான்கு காவல் நிலையங்களும் ஆவடி கமிஷனரகத்தில் இணைக்கப்பட்டன. இதனால், புகார் தொடர்பாக, கமிஷனர் அலுவலகம் செல்லும் பொதுமக்களும், அலுவலக பணி மற்றும் கூட்டங்களுக்கு தலைமையகம் செல்ல வேண்டிய போலீசாரும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
சென்னை காவல் மாவட்டத்தின் தலைநகரமாக செயல்பட்டு வந்த இந்த காவல் நிலையங்கள், ஆவடி கமிஷனரகத்தின் வால் பகுதியாக மாறியிருப்பது, பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த நான்கு காவல் நிலையங்களை, மீண்டும் சென்னை கமிஷனரகத்திற்குள் இணைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐசிஎப் காலணியிலும், கொரட்டூர் அருகே உள்ள வாட்டர் கேனல் பகுதியிலும், புதூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரி அருகே புதிதாக காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு காவல் நிலையங்களிலும் தல இரு காவல் உதவி ஆய்வாளர்கள் பணியில் இருப்பர்.
இந்தப் புற காவல் நிலையங்களில் பெறப்படும் அணுக்கள் மீது உடனடியாக ரசீது வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயரதிகாரிகள் அறிவுறுத்து உள்ளனர்.
0 Comments