திருநெல்வேலி – நவ-02,2023
newz – webteam
இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் C.மகேஸ்வரி இ.கா.ப உத்தரவின் பேரில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப (கிழக்கு) K.சரவணகுமார் (மேற்கு), .G.S.அனிதா (தலைமையிடம்) ஆகியோர் வழிகாட்டுதலின் படி நெல்லை மாநகர போக்குவரத்துக்கு காவல் உதவி ஆணையாளர் காமேஸ்வரன், காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வாகனம் ஓட்டும் பொது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்
1) ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.
2) இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்பொழுது ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
3)இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
4) இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் இடது புறமாகவே ஓட்ட வேண்டும் இடது புறமாக வாகனத்தை முந்தக்கூடாது.
5) செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது.
6) குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது.
7) வாகன பதிவு எண் அரசு ஆணைப்படி சரியான அளவில் எழுதப்பட வேண்டும்.
8) வாகனத்தில் கண் கூசும் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
9) அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது.
10) சாலைகளில் வாகனங்களில் சாகசம் செய்யக்கூடாது.
போன்ற அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
0 Comments