

சென்னை – பிப் -21,2024
newz – webteam
தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்
வழிப்பறி குற்றவாளி கைது
கடந்த மாதம் 25ஆம் தேதி மதியம் 2 மணிக்கு, புகார்தாரர் ராஜேஸ் என்பவர் அவரது சொந்த வேலை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பெரம்பூர் செல்ல வேண்டி டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயில் நிலைய நடைமேடை எண் 16-ல் ரயிலுக்காக காத்திருந்த சமயம் சுமார் 30-35 வயது மதிக்கத்தக்க பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய ஒருநபர் அவரது சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸை பிடுங்கியதாகவும்
, அதை தடுத்த ராஜேஸை கீழே தள்ளிவிட்டு, மணிபர்ஸை பிடுங்கிகொண்டு ஓடிவிட்டதாகவும், அந்த பர்ஸில் பணம் ரூபாய்.1500/-(ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) ஆதார்கார்டு டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சிபுக் நகல்கள் மற்றும் ரயில் டிக்கெட் ஆகியவை இருந்ததாகவும், நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரை பெற்று சென்னை சென்ட்ரல் இ.பா.காவல் நிலைய குற்ற எண் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட நபரான சுரேந்திரா, ஆ/31, S/o. தரம்பால்சிங், பட்ஸ்யானா கிராமம், அர்முக்தேஷ் தாலுக்கா, ஹபூர் மாவட்டம், பதுர்கார் காவல்நிலையம் உத்தரபிரதேசம் என்பவரை 28.01.2024 -ம் தேதி மாலை 06.00 மணிக்கு சென்னை வியாசார்பாடி ரயில் நிலைய நடைமேடை எண்: 1மற்றும் 2ல் வைத்து கைது செய்து வழக்கு சொத்தான பணம் ரூபாய்.720 ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ஆர்சிபுக் நகல்கள் ஆகியவை
கைப்பற்றப்பட்டு 29.01.24 ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் எதிரி அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய இருப்புப்பாதை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல இடங்களிலும் வழிப்பறி செய்து வைத்திருந்த தங்க நகைகளை அவரது சொந்த ஊரான உத்திரப்பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களுக்கு சென்றும், மேற்படி வழக்குகளில் சம்மந்தப்பட்ட களவு சொத்தான மொத்தம் 14 சவரன் எடையுள்ள தங்க கட்டியானது05.02.2024 அன்று கைப்பற்றப்பட்டது.
3.கஞ்சா கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்ட நற்செயல்சேலம் இருப்புப்பாதை உட்கோட்டத்தில் இரயில் வண்டிகளில் தடைசெய்யப்பட்டகஞ்சா கடத்துதலை தடுக்கும் பொருட்டு, ஜோலார்பேட்டை இருப்புப்பாதை காவல்
நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் .சுப்பிரமணி அமைக்கப்பட்ட
போதைப்பொருள் தடுப்பு படையினர், கடந்த 04.02.2024-ஆம் தேதி இரயில் வண்டி
எண்.13351 தன்பாத் ஆலப்புழா விரைவு வண்டியில் -S3 பெட்டியில் சோதனை
செய்தபோது 18 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்ட
அனில்லிமா (20), த.பெ. அபேல் லிமா, ராய்பும்கா கிராமம், கடுவா காவல் நிலையம், கஜபதி
(மாவட்டம்), ஒடிசா (மாநிலம்), ரோக்கி மாஜி (20), த/பெ நோரி மாஜி, ராய்பும்கா கிராமம்,கடுவா காவல் நிலையம், கஜபதி (மாவட்டம்), ஒடிசா (மாநிலம்) ஆகியோர்களை கைது
செய்து சேலம் மாவட்ட போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரிடம்
ஒப்படைக்கப்பட்டது.
0 Comments