ஆவடி – டிச -14,2023
Newz – webteam
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் சென்னை ஆவடி சின்னம்மன் கோவில்தெருவில் வசிக்கும் ராமு என்பவரின் மனைவி மங்கையர்கரசி 68 என்பவர் கொடுத்த புகார் மனுவில் தனது அனுபவத்தில் பருத்திப்பட்டு கிராமம் ஆவடியில் 36 சென்ட் இடத்தை தனது பணத்தேவைக்காகவும் மருத்துவ செலவிற்காகவும் விற்க முடிவு செய்து நில புரோக்கர் சீனீவாசன் மூலமாக ஷமிலத் ஜமாலூதீன் என்பவருக்கு 36 சென்டிற்கு ரூபாய், 1,54,00,000/- என விலை பேசிமுடித்துள்ளார். ஷமிலத் ஜமாலூதீன் இந்த நிலத்தின் பெயரில் வங்கியில் லோன் பெற வேண்டி பணத்தை காசோலைகளாக தருவதாக கூறி மூன்று காசோலைகளாக கொடுத்துவிட்டு. சார்பதிவாளரை மனுதாரரின் வீட்டிற்கே அழைத்து வந்து கையொப்பமிட கூறியுள்ளார் மனுதாரர் பணத்தை வங்காமல் கையெழுத்து போடமாட்டேன் என்று கூற. வங்கியில் பணம் தயாராக உள்ளது என்று கூறி ஏமாற்றி கையெழுத்து பெற்று கிரையம் செய்துகொண்டதாகவும் காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது ஷமிலத் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திருப்பபட்டதாகவும். இது நாள்வரையில் மனுதாரருக்கு பணத்தை தராமல் நம்பிக்கை மோசடி செய்து ஷமிலத் சுயலாபம் அடைந்துள்ளார். இதன் மதிப்பு 1 கோடியே 34 லட்சம் ஆகும்.
இப்புகார் மனு சம்மந்தமாக ஆவடி காவல் ஆணையாளர் உத்தவு படி ஆவடி மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவில் (EDF-IV) ஆய்வாளர் .பரணி வழக்கு பதிவு செய்து சென்னை முகப்பேரை சார்ந்த ஜமாலுதீன் மனைவி ஷமிலத் ஜமாலூதீனை இன்று கைது செய்து நீதிமன்றகாவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments