கோயம்புத்தூர் – மே,27,2024
Newz -webteam
செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன், இ.கா.ப., முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் செட்டிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த வீரன் மகன் சம்பத்@ தம்பன்(48) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 63 நபர்கள் மீது 37 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 87.245 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் அதேபோல் சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படயில் சூலூர் காவல் நிலைய காவல்துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த நிரஞ்சன் ஹாஷிம் மகன் முகமது ஷம்சாத்(39) மற்றும் மகேந்திர மஹ்தோ மகன் ஜெய் நாராயணன்மஹ்தோ(39) ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
0 Comments