270,கிலோ எடையுள்ள குட்கா பறிமுதல் 5,பேர் கைது எஸ்பியின்  தனிப்படை போலீசார் அதிரடி….


கோயம்புத்தூர் – மே,25,2024

Newz -webteam

270 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்… கோவை மாவட்ட காவல்துறையினர் அதிரடி…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான போலிகவுண்டன்பாளையம் அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆல்வின்(30), கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது மகன் சர்ஃபுதீன்(38), அனிஃபா மகன் இஸ்மாயில் (29) , பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த ஜெயராஜ் மகன் இமானுவேல் (38) மற்றும் துரைப்பாண்டியன் மகன் பாலசுப்பிரமணி(47) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3,00,000/- மதிப்புள்ள 270 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், இருசக்கர வாகனம்-1,நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் ரூபாய் 1,99,000/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 37 நபர்கள் மீது 32 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 372.77 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format