சென்னை – டிச -07,2023
newz – webteam
பொருளாததார குற்றப்பிரிவு, சென்னை நவம்பர் 2023 மாதத்தின் சிறப்பான செயல்பாடுகள்.பொருளாதார குற்றப்பிரிவானது இரண்டு முக்கிய வழக்குகளில் தண்டனைகளைப் பெற்றுள்ளது. விஸ்வப்பிரியா பைனான்சியல் சர்வீசஸ் அண்ட்செக்யூரிட்டீஸ் லிமிடெட் & 33 குற்றவாளிகள் மற்றும் M/s. ஆப்ரோ டிரஸ்ட் நிறுவனம் 4 குற்றவாளிகள் (1) 20.11.2023 அன்று டிஎன் பி ஐ டி சிறப்பு நீதிமன்றம், சென்னை விஸ்வபிரியா பைனான்சியல் சர்வீசஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் 33 நபர்கள் மற்றும் 17 நிறுவனங்கள் உட்பட 32 நபர் நிதிநிறுவனத்தை குற்றவாளிகளாக அறிவித்து வரலாற்று சிறப்பானதொரு தீர்ப்பினை வழங்கியது. தவறிழைத்த நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ.4,46,30,000/- அபராதமும் விதித்தது. இம்மோசடி நிதிநிறுவனத்தின் மூளையாக செயல்பட்ட நான்காவது குற்றவாளியான ஆர்.சுப்பிரமணியன் என்பவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், 120(பி), இந்திய தண்டனைச் சட்டம் 420,406 மற்றும் டி.என்.பி.ஐ.டி சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் ரூ.2,23,30,000 அபராதமும் விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. மேற்படி தீர்ப்பானது பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றிலேயே வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டணை ஆகும். 20.11.2023 அன்று சென்னை எழும்பூர் தலைமைப் பெருநகர நீதிமன்றம், பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்கில், M/s. ஆப்ரோ டிரஸ்ட் கம்பெனி மற்றும் 4 குற்றவாளிகள் உட்பட 5 குற்றவாளிகளுக்கும். சேர்த்து மோசடி நிதிநிறுவனங்களுக்கு தலா ரூ.2,00,000/- அபராதமும், மற்ற குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைதண்டணையும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 406, 420, 409-ன் கீழ் அபராதமும் தலா ரூ.14,00,000/- விதித்து தீர்ப்பளித்தது.
2023 நவம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய வழக்குகளில் 7 குற்றவாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் லிமிடெட் என்ற நிதி நிறுவன வழக்கின் சிறப்பு பிரிவானது மிக முனைப்புடன் செயல்பட்டு மேற்படி வழக்கின் மூளையாகவும் முக்கிய குற்றவாளியாகவும் செயல்பட்டு துபாயில்
தலைமறைவாகி இருந்து, NCB. துபாய் நிறுவனத்தினரால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள
ராஜசேகரன் வீரராகவன் என்பவரை கைதிகள் ஒப்பந்த பரிமாற்றம் அடிப்படையில்
உடனே இந்தியா கொண்டு வர முதன்மை அமைப்புகளான மத்திய புலனாய்வு
பிரிவு, உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் புதுதில்லி ஆகியநிறுவனங்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மிக மெச்சதக்கசெயலாகும். மதுரை பொருளாதார குற்றப்பிரிவு வழக்கில் ரூ.154கோடி பணத்தினை மோசடி செய்த மோசடி நிதிநிறுவனமான நீயோமேக்ஸ் பிராப்பர்டீஸ்பிரைவேட் லிமிடெட் ” மற்றும் சார்பு நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டு வழக்கின் முக்கிய
குற்றவாளியான 7வது பால சுப்பிரமணியன் இயக்குநர் மற்றும் நிறுவனர் 8வது குற்றவாளியான வீர சக்தி இயக்குநர்மற்றும் நிறுவனர் உட்பட 5 குற்றவாளிகள் 28.11.2023 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற
காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இராமநாதபுரம் பொருளாதாரக் குற்றப்பிரிவில் பதிவுசெய்யபடஂட வழக்கில் புல்லியன் ஃபின்டெக்ஸ் எல்.எல்.பி நிறுவனம் மற்றும் பிறருக்கு
எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 20 நபர்கள் கைது செய்யப்பட்டுநீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்
இணைப்புக்காக அடையாளம் காணப்பட்டசொத்துக்கள்
முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பிச் செலுத்துவதற்காக பறிமுதல் செய்யப்படவேண்டிய சொத்துக்களை அடையாளம் கண்டு மேல் நடவடிக்கை மேற்கொள்வதில்பொருளாதாரக் குற்றப்பிரிவு முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு,
பொருளாதாரக் குற்றப்பிரிவில் விசாரணை செய்யப்பட்டு வரும் மெகா வழக்கான,
நீயோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன வழக்கில், நவம்பர்-2023-ல் ரூ.1.2
கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் பணம், தங்கம் மற்றும் விலையேறப்பெற்ற
சொத்துக்கள், 15 மகிழுந்துகள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5977 அசையா சொத்துக்களின்ஆவணங்கள் இதுவரை இவ்வழக்கில் பறிமுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு மெகா வழக்கான M/s. HIJAU Associates Private Ltd, வழக்கில், நவம்பர். 2023-ல் மட்டும் சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு, பறிமுதல் செய்ய செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சொத்துக்கள் இணைப்பிற்கான இடைமுடக்க அரசாணை பெறப்பட்ட விபரம்
முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பிச் செலுத்துவதற்காக பறிமுதல்
செய்யப்பட்ட அசையா சொத்துக்கள் ரூ.1,05,016/- மற்றும் ரூ.90,54,450/- முறையே M.s. ஒயிட்காலர் அசோசியேட்ஸ், கோயம்புத்தூர் மற்றும் ஸ்ரீவாரிபைனான்ஸ், கோயம்புத்தூர்
ஆகியவற்றிடமிருந்துபெறப்பட்டுள்ளது.
இடைமுடக்கம்செய்யப்பட்டு நவம்பர்-2023-ல் அரசாணை பெறப்பட்துள்து
0 Comments