சென்னை – டிச -06,2023
newz – webteam
சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் அவர்கள் வேளச்சேரி பகுதிக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்தது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் என சுமார் 18,400 காவல் அலுவலர்கள், சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும் வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப.,இன்று காலை வேளச்சேரி, டான்சிநகர் பகுதிக்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளைப் பார்வையிட்டார். காவல் ஆணையாளர் அவர்கள், டிரோன் கேமரா பயன்படுத்தி மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை கண்காணித்து மீட்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், மீட்புப் படகில் பயணம் செய்து அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., இணை ஆணையாளர் (தெற்கு) தசிபி சக்ரவர்த்தி, இ.கா.ப., அடையாறு, துணை ஆணையாளர் R.பொன்கார்த்திக் குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
0 Comments