சென்னை – அக்-05,2023
newz – webteam
தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், தேவையைக் குறைக்கவும். தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. 30.09.2023ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மத்திய திருச்சி நுண்ணறிவுப்பிரிவு மற்றும் உதவி ஆய்வாளர், மதுரை மத்திய நுண்ணறிவுப்பிரிவு. ஆகியோரது குழுக்கள் இணைந்து இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 860 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய எதிரிகள் 1. கருப்பண்ணன 2 பாப்பா 3. ஆறமுகம் 4. ரவிக்குமார் 5. முத்துராமலிங்கம் ஆகிய ஐந்து எதிரிகளையும் கைது செய்து, போதைப் பொருளை கடத்த பயன்படுத்திய மேற்படி இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றபட்ட பொருள்களின் மதிப்பு சுமார் ரூபாய்-85,00,000/-ஆகும்.
மேற்படி சோதனை மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதலில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், இ.காப, பாராட்டினார்,
இது போன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை என் 10581 அல்லது CUG No. 9498410581 னை தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் குறித்த இரகசியம் காக்கப்படும்.
0 Comments