சென்னை – அக் 21,2023
newz – webteam
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்கநரஂ
உத்திரவின் பேரில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
அருகாமையில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் கூல்
லிப் ஆகியவை விற்பணை தொடர்பாக வாராந்திர சிறப்பு சோதனை
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அதில் 01.10.2023 முதல்
19.10.2023 வரையில் 1,050 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,074 குற்றவாளிகள்
கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து 1.810 கிலோ தடை செய்யப்பட்ட
புகையிலைப் பொருட்கள் 389 கிலோ கூல் லிப் (Cool Lip) மற்றும் 15 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா விற்பணை தொடர்பாக 2023 ஜனவரி முதல்
செப்டம்பர் மாதம் வரையில் 25,518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24,796
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து 1,26,929 கிலோ
குட்கா மற்றும் 453 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பள்ளி
மற்றும் கல்லூரிகள் அருகாமையில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும்
புகையிலைப் பொருட்கள் விற்பணை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments