திருப்பத்தூர் – பிப் -01,2024
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS, நேற்று திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு அங்கு பயன்படுத்தப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
காவல் நிலையங்களில் பெறப்படும் அனைத்து புகார் மனுக்கள் மீதும் காவல் நிலையத்தில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் புகார் தாரர்களுக்கு கட்டாயம் ஒப்புதல்சீட்டு வழங்கவும் அதனை மனுதாரர்கள் பெற்றுக் கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS, அவர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்பதை மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments