மயிலாடுதுறை -ஜீன் -03,2024
Newz -webteam
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்.2024 மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தல் AVC பொறியியல் கல்லூரி மற்றும் AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் நாளை 04.06.2024 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது
இது தொடர்பாக இன்று காலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) P.ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணையவழி குற்றம்) சிவசங்கர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது கல்லூரி வளாகத்திற்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள், போக்குவரத்து மாற்றம் மற்றும் நுழைவு வாயில் சோதனை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவித அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 02 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 05 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19 காவல் ஆய்வாளர்கள், 60 உதவி ஆய்வாளர்கள், 282 காவல் ஆளிநர்கள், 30 ஆயுதப்படை காவலர்கள், 66 சிறப்பு காவல் படையினர், 88 ஊர்க்காவல் படையினர் மற்றும் 36 மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் என மொத்தம் 594 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
0 Comments