காவல் துறை மற்றும் நீதித்துறை ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப. மற்றும் திருவள்ளூர் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் மோகன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் நீதித்துறையினர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பாக புலன் விசாரணை முடித்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் இடையே கலந்தாலோசிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், காவல் கூடுதல் ஆணையாளர் , காவல் துணை ஆணையாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் காவல் கூடுதல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments