

நெல்லையில் கடத்த முயன்ற
100 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
5 பேர் கைது
நெல்லை மாநகரப் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதைத் தொடர்ந்து தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் மகேஷ் குமார் தலைமையிலான காவலர் இரவு தச்சநல்லூர் பழைய மதுரை ரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான் முறையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் வண்ணாரப்பேட்டை கொக்கரகுளம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி 42 என்பது தெரிய வந்தது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார் அருகே நின்றிருந்த இரண்டு சரக்கு வாகனங்களை காவலர் சோதனை செய்தனர் அதில் சுமார் 100 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது
இதை அடுத்து மாடசாமியை கைது செய்து நடத்திய விசாரணையில் இந்த கடத்தலில் தாழையத்து அருகேயுள்ள
நாராயணம்மாள் புரத்தை சேர்ந்த சுடலைமுத்து, சங்கர் நகரை சேர்ந்த முத்துப்பாண்டி (32) அருகன்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42) மற்றும் அம்பை அடுத்து மன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த கோபி (20) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது இதை அடுத்து அவர்கள் 4 பேரையும் காவலர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட கும்பலையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 மூடை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு சரக்கு வாகனங்களையும் மேல்விசாரணைக்காக நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலரிடம் மாநகர காவலர் ஒப்படைத்தனர். இந்தக் கடத்தலின் பின்னணி குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments