


கோயம்புத்தூர் – மார்ச் -11,2026
Newz – webteam
கோவை மாவட்ட காவல்துறை சார்பாக – பொதுமக்களுக்கு உதவ ” KOVAI DIGI COP“ என்ற பெயரில் “Chat Bot” – WHATSAPP சேவை அறிமுகம் – ” Hi ” என +91-98400-91100 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்வதன் மூலம் பல்வேறு வகையான சேவைகள் உங்களுக்காக.!
பொதுமக்கள் காவல்துறையுடன் எளிதாக தொடர்பு கொண்டு, காவல் தொடர்பான தகவல்களை உடனடியாக பெறும் வகையில் “KOVAI DIGI COP“ என்ற பெயரில் “Chat Bot” – WHATSAPP சேவை அறிமுகம் செய்துள்ளது. ” Hi ” என +91-98400-91100 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்வதன் மூலம் பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படும்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் இச்சேவையை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சரவணசுந்தர்,இ.கா.ப, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர்,இ.ஆ.ப., மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் திரு.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்த Chat Bot சேவை பொதுமக்களின் கேள்விகளுக்கு தானியங்கி முறையில் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் மற்றும் மெசேஜிங் தளங்கள் மூலம் அணுகக்கூடிய இந்த சேவை 24 மணி நேரமும் (24×7) பொதுமக்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.
இந்த சேவையின் மூலம் கிடைக்கும் வசதிகள்:
- அவசர தொடர்பு எண்கள்
- இணைய வழி புகார் அளிப்பது
- அருகில் உள்ள காவல் நிலையங்களின் அமைவிடம் மற்றும் தொடர்பு எண்கள்.
- தினசரி இரவு ரோந்து அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள்.
- இணைய வழி குற்றங்கள் தொடர்பான புகார் அளிக்க வழிகாட்டுதல்
- போக்குவரத்து விதிமீறல் மற்றும் அபராதம் செலுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்.
- பொதுமக்கள் தங்கள் அடையாளம் தெரிவிக்காமல்,காவல்துறைக்கு போதை பொருள்,பெண்கள் பாதுகாப்பு,போக்குவரத்து நெரிசல் போன்ற தகவல்களை விரைவு நடவடிக்கைக்காக அளிக்கும் வகையில் வசதி.
- பொதுமக்கள் அளித்த புகார்களின் நிலை விவரம் தெரிந்து கொள்ளும் வசதி.
- இலவச சட்ட உதவி பெற தகவல் அறியும் வசதி.
- காவல்துறை மற்றும் சட்டம் சம்மந்தமாக பொதுமக்களுக்கு அடிக்கடி எழும் கேள்விகளுக்கான பதில்கள்.
- பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல்கள்
இந்த சேவையின் மூலம் பொதுமக்களுக்கு காவல்துறை தொடர்பான தகவல்கள் விரைவாக கிடைப்பதுடன், காவல் நிலையங்களில் நேரடியாக விசாரணைக்கு வருவோரின் எண்ணிக்கையும் குறையும். இதன் மூலம் காவல்துறையின் சேவை வழங்கும் திறன் மேலும் மேம்படும்.
மேலும், இந்த சேவை காவல்துறை தரவுத்தளங்களுடன் இணைக்கப்பட்டு தொழில்நுட்ப நிபுணர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பாதுகாப்பு முறைகளும் உறுதி செய்யப்படும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததாவது:
“பொதுமக்களுக்கு காவல்துறையின் சேவைகள் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த Chat Bot- +91-98400-91100 சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்த நேரத்திலும் காவல் தொடர்பான தகவல்களை பெற முடியும். இது டிஜிட்டல் காவல் சேவைகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகும்.”
இந்த சேவை பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


0 Comments