ஆவடி – ஆகஸ்ட் -12,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று வணிகர்களின் குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக கலந்தாய்வு கூட்டம் அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PSV கன்வன்சன் சென்டரில் காவல் ஆணையாளர் கி.சங்கர் இ.கா.ப. ஆவடி காவல் ஆணையரகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த திருமுல்லைவாயல், ஆவடி அம்பத்தூர் பட்டாபிராம். செங்குன்றம். கொரட்டூர் மணலி புது நகர், மீஞ்சுர், திருநின்றவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 180 வணிகர்கள் கலந்துக்கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெறிசல், காவலர்களின் ரோந்து அதிகரித்தல். புறக்காவல் நிலையம் அமைத்து காவலர்களை நியமித்தல், CCTV கேமிராக்கல் அமைத்தல் போன்ற தேவைகளை கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவித்தனர். வணிகர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையாளர் உறுதியளித்தார்.
0 Comments