மதுரை – ஆகஸ்ட் – 12,2023
newz – webteam
பழிக்குப்பழி கொலையை தடுத்த தலைமைக் காவலர்.
பழிக்குப் பழியாக நடக்கவிருந்த கொலை சம்பவத்தை தடுத்த தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டிய தென் மண்டல காவல்துறை தலைவர் K.S. நரேந்திரன் நாயர் IPS
மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி காவல் நிலைய தலைமை காவலர் திருக்குமரன் இவர் நேற்று காலை பணிநிமித்தமாக அவனியாபுரத்திலிருந்து செல்லும் போது தெற்கு வாசல் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 நபர்களை பிடித்து விசாரித்தார்.
உடனே அவர்கள் ஒரு சாக்குப்பையை போட்டுவிட்டு தப்பி ஓடினார். அந்த சக்குப்பையை சோதனை செய்தபோது ஆயுதங்கள் இருந்தன, சற்றும் தாமதிக்காமல் திருக்குமரன் அவர்கள் கீரைத்துறை காவல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அவற்றை ஒப்படைத்தார்.
மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு மூன்று பேரையும் கைது செய்தனர், விசாரணையில் அவர்கள் மூவரும் பழிக்குப் பழியாக ஒருவரை கொலை செய்யும் நோக்கத்துடன் அங்கு கூடி இருந்தது தெரியவந்தது. இதில் தலைமை காவலரின் துரித நடவடிக்கையால் அச்சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இதை அறிந்த தென்மண்டல காவல்துறை தலைவரான
K.S. நரேந்திரன் நாயர் IPS தலைமைக் காவலர் திருக்குமரனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் மேலும் காவல் உதவி ஆணையர் திரு.ராமகிருஷ்ணனும் அவர்களும் தலைமைக் காவலரை பாராட்டி வெகுமதி அளித்தார். தலைமை காவலர் குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
0 Comments