திருநெல்வேலி – செப் -08,2023
newz – webteam
மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.
தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி, சைபர்கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் . தேவராணி, இ.கா.ப மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி இன்று திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்கள் ராஜரத்தினம், மோகன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் ராம்நயினார் ஆகியோர் காவல்கிணறு RAJAS DENTAL COLLEGE and RAJAS NURSING COLLEGE மாணவ, மாணவியர்களுக்கு இணைய வழி முதலீடு செய்வதில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், Loan App மோசடிகள் குறித்தும் Online Shopping Websites வழியாக நடைபெறும் மோசடி குறித்தும் பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இணைய வழி குற்றங்களால் பாதிக்கபட்டால் உடனடியாக இலவச தொலைபேசி எண் “1930” வழியாகவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தள வழியாகவும் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
0 Comments