சென்னை – செப் -08,2023
newz – webteam
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா” (VEERA – Vehicle for Extnication in Emergency Rescue and Accidents) அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, இ.ஆ.ப, உள்துறை முதன்மைச் செயலாளர் பெ, அமுதா, இ.ஆ.ப.காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோட், இ.கா.ப., காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments