ஆவடி – செப் -02,2023
newz – webteam
இரவு ரோந்தில் அதிரடி காட்டிய ஆவடி காவல் ஆணையர்
01.09.2023 நள்ளிரவில் ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர்.இ.கா.ப காவல் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் இரவு ரோந்து மேற்கொண்டார் இரவு ரோந்தில் சாலையோர உணவகங்களில் இருந்த நபர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருக்கின்றதா என சோதனை மேற்கொண்டார். இரவில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகின்றதா என்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது காவலர்களின் இரவு ரோந்து, வாகன சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கொரட்டூர். அம்பத்தூர் செங்குன்றம், மாதவரம் பால் பண்ணை, மணலி சாத்தான்காடு, எண்ணூர், ஆகிய பகுதிகளில் விடிய விடிய இரவு ரோந்து மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments