திருநெல்வேலி – ஜீலை -20,2023
newz – webteam
காவல் சரகங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கபடி போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்து பதக்கம் பெற்ற திருநெல்வேலி சரக காவல் அமைச்சுப் பணியாளர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த 14.07.2023 மற்றும்15.07.2023 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு காவல் சரகங்களுக்கிடையே கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, சதுரங்க விளையாட்டு, கேரம் போர்டு, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சரகங்களைச் சேர்ந்த காவல் அமைச்சு பணியாளர்கள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட திருநெல்வேலி சரக காவல் அமைச்சுப் பணியாளர்கள் கபடி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்று பதக்கம் பெற்றுள்ளனர்.
மேற்படி காவல் சரக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கபடி போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற திருநெல்வேலி சரக காவல் அமைச்சுப் பணியாளர்களை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் இ.கா.ப., பாராட்டினார்.
0 Comments