திண்டுக்கல் – ஜீலை -25,2023
newz – webteam
திண்டுக்கல் மாவட்டத்தில் இருவேறு நபர்களிடம் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1,08,406/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் A.வெள்ளோட்டை சேர்ந்த ஜெயந்தி மற்றும் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்களை மர்ம நபர்கள் TATA Capital கம்பெனியிலிருந்து கடன் வாங்கித் தருவதாக கூறி ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி விபரங்களை பெற்று முறையே ரூ. 51,548/- மற்றும் ரூ. 55,858/- மொத்தம் ரூ. 1,08,406/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் மீனா அவர்கள் மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.1,08,406/- பணத்தை மீட்டனர்
இதனையடுத்து இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் மீட்கப்பட்ட ரூ.1,08,406/- பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தார்
0 Comments