கோயம்புத்தூர் – மே -07,2023
newz – webteam
காவலர் குழந்தைகளுக்கான கோடைகால முகாம்… Kids Summer Fun Camp…
கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடை கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., இன்று (08.05.2023) மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) துவங்கி வைத்தார். இம்முகாமில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைதல் , ஓவியங்களின் முக்கியத்துவம், உடற்பயிற்சி மற்றும் கைப்பந்து பற்றிய அறிமுக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இம்முகாமில் சுமார் 50 குழந்தைகள் கலந்து கொண்டு அவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார்கள். இம்முகாம் இன்று (08.05.2023) முதல் (18.05.2023வரை நடைபெற உள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இ.கா.ப., மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கு இத்தகைய ஒரு அறிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மாவட்டக் காவலர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது….
0 Comments