நாகப்பட்டினம் – மே -07,2023
newz – webteam
நாகப்பட்டினம் மாவட்டம் சைபர் கிரைம் காவல்துறையினர் இணையவழியில் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் ரூபாய் 1,29,740/-பணத்தை மீட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர். இ.கா.ப முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது
1, s. நவீன், பால்பண்ணைச்சேரி நாகூர் . என்பவரிடம் go business india நிறுவனத்திற்கு mobile application create செய்து தருவதாக கூறி ரூ 10000/- பணத்தை இணைய வழியில் மோசடி செய்துள்ளார்கள்.
2, R. சத்யராஜ் மகாராஜபுரம், வேதாரண்யம். என்பவரிடம் booking. Com என்ற இணையதளத்தின் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக sterling ooty elk hill- ல் room book செய்து, பின்பு அந்த ஆர்டரை கேன்சல் செய்த பிறகும் மனுதாரருடைய கிரெடிட் கார்டில் இருந்து ரூ 1,19,740/-பணத்தை இணைய வழியில் மோசடி செய்துள்ளார்கள்.
இவ்வாறு மோசடியில் ஈடுபட்டோரின் வங்கி கணக்குகளை முடக்கியும், நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த குற்றச் சம்பவத்தை துரிதமாக நடவடிக்கை எடுத்து குறுகிய காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை ஒப்படைத்த நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் காவல் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் இணையத்திலும்,1930 என்ற இலவச தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
0 Comments