தென்காசி -அக் -28,2024
Newz -webteam
திருட்டு வழக்கின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் உட்கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கலிங்கப்பட்டி கிராமத்தில் கடந்த 27.02.2024-ம் தேதி லட்சுமி மற்றும் கண்ணகி ஆகியோர்கள் வீட்டை பூட்டி வெளியே சென்றிருந்த போது இனம் தெரியாத திருடர்கள் இரு வீட்டிலும் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த சுமார் 24 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர். மேற்படி வழக்கை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் மூர்த்தி I.P.S.,உத்தரவின் பேரில்,
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் மேற்பார்வையில், சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா, சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் பல்வேறு இடங்களிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு, 1.தங்கராஜ் (42) த/பெ முனியராஜ், சிவகங்கை மாவட்டம் மற்றும் 2.அஜித் (எ) அஜித்குமார் (24) த/பெ பாண்டி, பச்சைபிள்ளையேந்தல் கிராமம், சிவகங்கை மாவட்டம் ஆகியோர்களை கைது செய்து
மேற்படி வழக்கில் திருடு போன சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்டு 8 மாதங்களாக அயராது பணி செய்து எதிரிகளை கைது செய்து சொத்துகளை கைப்பற்றிய மெச்ச தகுந்த பணியினை செய்த காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி அவர்களுக்கு பரிசு வழங்கினார்.
0 Comments