திருவாரூர் -ஜீன் 11,2024
Newz -webteam
பெங்களூரிலிருந்து தனியார் பார்சல் சர்வீஸ் முலம் குட்கா கடத்தியவர் கைது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார், பதவி ஏற்றதிலிருந்து திருவாருர் மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக கஞ்சா, குட்கா மற்றும் பான்மசாலா போன்ற போதை பொருட்களை சட்ட விரோதமாக வைத்திருப்பவர்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரின் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிரான அதிரடி வேட்டைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்
தனிப்படையினருக்கு இன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மோகன் (எ) மோகனசுந்தரம், த/பெ. கிருஷ்ணன், வேதபுரம் ரோடு, ஆதிச்சபுரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக அறிந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இன்று கோட்டூர் அருகே மேற்கண்ட மோகனசுந்தரம் தனது இருசக்கர வாகனத்தில் தனிப்படையினர் 1) Hans – 330 Bundle, 2) Coollip 45 Bundle, 3) Vimal – 20 Bundle அடங்கிய 120 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களுடன் அதன் மதிப்பு ரூ.2,31,000/- கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்ட விரோத கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது ஏற்கனவே சட்ட விரோத குட்கா விற்பனைக்காக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. குட்கா விற்பனை செய்ததற்கான இவரது பெட்டிக்கடைக்கு சுகாதார துறை அதிகாரிகள் முலம் சீல் வைத்தும் சட்ட நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் தொடர்ந்து குட்கா, பான்மசாலா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,எச்சரித்துள்ளார்
0 Comments