திருநெல்வேலி – மே -10,2023
newz – webteam
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், 23 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் முந்தைய வாரங்களில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த மனுக்களின் 108 மனுதாரர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு காவல் அதிகாரிகள் மூலம் மனுக்கள் விசாரிக்கப்பட்டு 94 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளது.
0 Comments