
மதுரை – பிப் – 20,2025
Newz – Webteam
மதுரை மாநகர காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் தற்போது 8 துப்பறியும் மோப்ப நாய்கள் உள்ளன.
மேற்படி நாய்கள் முறையாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு காவல்துறையினரோடு இணைந்து கண்ணக்கடவு வழிப்பறி மற்றும் திருட்டு கண்டுபிடிக்கும் பணிக்கும்
வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கும் பணிக்கும்
போதைப்பொருள் கண்டுபிடிக்கும் பணிக்கும்
பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில்தற்போதுமதுரை மாநகர காவல்துறைக்கு மேலும் ஒரு புதிய துப்பறியும் நாய் வாங்கப்பட்டு இன்று அதற்கு காவல் ஆணையர் .லோகநாதன்
அழகர் என்று பெயர் சூட்டினார்
மேலும் புதிதாக வந்துள்ள அழகர் என்ற துப்பறியும் நாய்க்கு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சியி மற்றும்
அறிவு சார்ந்து மோப்பத்திரனை அதிகரிக்க பயிற்சிகள் அளிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
இந்நிகழ்ச்சியில் மேற்படி மோப்ப நாய் படை பிரிவு ஆய்வாளர் ராமசாமி மாநகர குற்ற ஆவணகூட ஆய்வாளர் திரு.தருமர் மற்றும் துப்பறியும் நாய் படை குழுவை சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments