திருப்பத்தூர் -அக் -23,2024
Newz -webteam



திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., இன்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் திருப்பத்தூர் முக்கிய கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்களில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை கட்டுபடுத்தும் முறைகள், போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப.,அவர்கள் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து காவல்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
0 Comments