திருநெல்வேலி -அக் -23,2024
Newz -webteam
பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுத கண்காட்சி.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன். மேற்பார்வையில், அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆயுத கண்காட்சி.
இந்த ஆயுத கண்காட்சியில் காவல்துறையினர் பயன்படுத்தும் ஏகே 47, கார்பைன், எஸ்எல்ஆர், இன்சாஸ், பிஸ்டல், ரிவால்வர், சிக்னல் பிஸ்டல் என பல்வேறு ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கண்ணீர் புகை குண்டுகளின் அனைத்து வகைகள் மற்றும் கலவர கூட்டத்தை கலைக்கவும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தும் ஆயுதம் போன்ற பல்வேறு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டு,
மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் உள்ள மோப்பநாய் மூலம் வெடி குண்டுகளை கண்டுபிடிப்பது மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து பிணை கைதிகளாக இருப்பவர்களை மீட்பது போன்றவற்றை செய்முறையாக காண்பித்தும் எளிமையாக புரியும் வண்ணம் காவல்துறையினர் எடுத்துரைத்ததை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
0 Comments