மதுரை -அக் -23,2024
Newz -webteam
மதுரை மாநகர காவல்துறை சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்காக கீழமாசி வீதி விளக்குத் தூண் சந்திப்பு, தெற்கு மாசி வீதி,கீழ ஆவணி மூல வீதி மற்றும் அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் அதிகமாக கூடுவார்கள் என்பதால் பொதுமக்கள் கூட்ட நெரிசல்களில் சிரமமின்றி பொருட்கள் வாங்குவதற்கும் அவர்களது உடைமைகளை பாதுகாக்க வேண்டிய நலன் கருதி விளக்கு தூண் சந்திப்பில் புதிதாக தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன், IPS, இன்று திறந்து வைத்தார்
இந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் கீழமாசி வீதி லெமன் மார்க்கெட்டில் இருந்து விளக்கத்ததூண் சந்திப்பு மற்றும் தெற்கு மாசி வீதி மற்றும் கீழ ஆவணி மூல வீதி வரை உள்ள பகுதிகளில் கண்காணிக்க 18 அதிநவீன கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டு இந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24/7 கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கீழ மாசி வீதி விளக்குத்தூண் சந்திப்பிலிருந்து தெற்கு மாசி வீதி வரை தமிழக அரசு சார்ந்த 24 cctv கேமராக்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக 88 சிசிடிவி கேமராக்களும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த சிசிடிவி கேமராக்கள் 208 என நான்கு மாசி வீதிகளிலும் மொத்தம் 338 கேமராக்கள் பொருத்தப்பட்டு
காவல்துறையினரால் தீவீரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கீழமாசி வீதி விளக்குத்தூண் சந்திப்பில் இருந்து மறவர் சாவடி வரை கிழக்கு மேற்கு நோக்கி காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டும் புதிதாக 18 காவல் கண்காணிப்பு கோபுரமும் பொதுமக்களுக்கு பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு 24 ஒலிபெருக்கிகள் அமைத்தும் சிறு குற்ற சம்பவங்கள் கூட நிகழாத வண்ணம் தீவிர கண்காணிப்பில் 500 காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு குற்றவாளிகளை கண்காணித்து குற்றம் நடவா தீபாவளியாக திகழ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..
0 Comments