திருவாரூர் -அக் -22,,2024
Newz -webteam
திருவாரூர் மாவட்ட காவல்துறை
பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் கண்காணிப்பாளர் போதை பொருட்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், M.Sc, போதை பொருட்களுக்கு எதிராகவும், கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களுக்குள் ஒற்றுமை, சாலை விதிகள் குறித்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்
அப்போது பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன், பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா, உதவி ஆய்வாளர் விக்னேஷ்குமார் மற்றும் காவலர்கள் உடனிருந்தார்கள்.
பள்ளி மாணவ மற்றும் மாணவிகளிடம் உறையாடிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொது அறிவுத்திறன் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நிதீஷ் மற்றும் நிதீஷ்குமார் ஆகிய மாணவர்கள் உடனுக்குடன் பதில் கூறி சிறப்பித்தனர். மேலும் இந்த ஆண்டு 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை தேடித்தந்த மாணவி செல்வி. பிரித்திஷா மற்றும் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்
.
மேலும் காவல் கண்காணிப்பாளர் உறையாற்றும் போது பள்ளிகளில் படிக்கும் போது உயர்ந்த நோக்குடன், நிறைந்த சிந்தனையோடும் கல்வி கற்று சிறப்பிக்கவேண்டும்.பள்ளியில் படிக்கும் காலத்தில் எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இன்றி சகோதரத்துவத்துடனும், அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
படிக்கும் காலத்தில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் எதனையும் உட்கொள்ளாமல் கல்வி ஒன்றையே நோக்கமாக கொண்டிருக்கவேண்டும். மாணவர்கள் எக்காரணம் கொண்டும் போதை பொருட்களுக்கு ஆளாக கூடாது அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்
மேலும் பள்ளியில் பயிலும் காலத்தில் மிகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும், சாதி பாகுபாடு அற்றவர்களாகவும், ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து கல்வி கற்பது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் மாணவர்களின் வயது 18-ற்குள் இருப்பதால் எந்தவித இரண்டு சக்கர வாகனங்களையும் இயக்காமல் இருப்பது நன்றாகும்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் இரண்டு சக்கர வாகனங்களை இயக்கி அதனால் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு தங்களின் பெற்றோர்களே சட்டப்படி குற்றவாளிகளாக கருதப்படுவர். அதனால் வாழ்வில் சட்டத்தை மதிப்பது மிகவும் போற்றத்தக்கது.
மேலும் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்த பின்பு அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளிடம் மாணவர்களை எதிர்காலத்தில் மிகச்சிறப்பாக கொண்டு செல்வது ஆசிரியர்களின் சிறப்பான பணியாகும் என்பது குறித்து கலந்துறையாடினார்கள்.
0 Comments